அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 20 October 2010

சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சி! (வீடியோ - 2)


சன் நியூஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நேருக்கு நேர் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம். இந்த விவாதம் இஸ்லாமிய‌ பிரமுகர்களை வைத்து நடத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட‌வேண்டியது.

பங்கேற்பு:- மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய குழு உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தமிழக பிரச்சாரக் குழு பொறுப்பாளர் சடகோபன்.

நெறியாளுகை: திரு. வீரபாண்டியன்.

"அநீதி இழைக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அமைதி காக்கிறார்கள். அதற்காக இஸ்லாமிய சகோதர‌ர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும்." - சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன்.



முதல் பாகத்தை பார்ப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

நீதியும் நேர்மையும் மனித நேயமும் கொண்ட மனிதர்கள் நமக்கு தெரியாமலே எத்தனையோ பேர்! அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் ஜி. முத்து கிருஷ்ணன் என்பதை இந்த சன் நியூஸ் நேருக்கு நேர் நிகழ்ச்சியினைப் பார்த்து நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நீதியை நிலைநாட்ட பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்து போராடும் வழக்கறிஞர் திரு. ஜி. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments:

  1. சில விஷயங்கள் மதங்களை நுழைக்காமல் சாமனிய அறிவை கொண்டு சிந்தித்தால் கூட புரியும் எது சரி எது தவறென்று.என் மகளது கைய்யில் இருந்த ஒரு நிலக்கடலை பாக்கெட்டை பிடுங்கி கொண்டு ஓடிய குட்டி பைய்யன் அது தன்னுடையது தான் என்று சொன்னான் அவன் அம்மாவும் அப்பாவும் கூட ஆமாம் என்று சமாளித்தார்கள்..அதை போலவே உள்ளது இது..

    ReplyDelete
  2. @ தளிகா...

    //சில விஷயங்கள் மதங்களை நுழைக்காமல் சாமனிய அறிவை கொண்டு சிந்தித்தால் கூட புரியும் எது சரி எது தவறென்று//

    சிந்தனைவாதிகள், நேர்மையாளர்கள் என்று நாம் நினைத்தவர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் எதுவுமே தெரியாத மாதிரி வாய்மூடி மௌனம் காக்கிறார்கள். ஒன்றுமே புரியாத மாதிரி கண்டும் காணாமல் இருக்கிறார்கள். ஒரு நியாயத்தைப் பேசுவதற்கு எதற்கு மதம்? தன் வீட்டு நிலம் ஒரு ஜாண் போனாலும் சும்மா இருப்பார்களா? ஹ்ம்.. என்னத்த சொல்றது..?

    //என் மகளது கைய்யில் இருந்த ஒரு நிலக்கடலை பாக்கெட்டை பிடுங்கி கொண்டு ஓடிய குட்டி பைய்யன் அது தன்னுடையது தான் என்று சொன்னான் அவன் அம்மாவும் அப்பாவும் கூட ஆமாம் என்று சமாளித்தார்கள்..அதை போலவே உள்ளது இது..//

    ஹா ஹா.. நல்ல ஜோக்கான, பொருத்தமான‌ உதாரணம் தளிகா! வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா.

    இதன் முதல் பாகத்தைப் பார்த்தீர்களா?

    http://payanikkumpaathai.blogspot.com/2010/10/blog-post_04.html
    இதையும் பாருங்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை