இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பான சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, (சுமார் 80 வருஷங்களுக்குப் பிறகு) இப்போது இந்திய நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே! அதுபற்றி வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு கட்டுரையைப் படித்துச் சென்றவர்களில் ஒருவரான சகோதரர் கோவி. கண்ணன், அதன் உண்மை நிலைத் தெரிந்தும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் வண்ணமாக சமீபத்தில் எழுதிய தன்னுடைய பதிவொன்றில் தவறான ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இன்னொரு சகோதரரும் நம் பதிவின் பின்னூட்டத்தில் அறியாப் பிள்ளைபோல் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் இருவருக்கும், இன்னும் இதுபோன்று ஒன்றுமில்லாத வெறும் வாய்க்கு அவல் மெல்லுபவர்களுக்கும், அதற்கு 'ஆமா சாமி' போடுபவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்! (என்னுடைய பதிவுலக வாழ்க்கையில் இதுதான் முதல் 'எதிர்ப் பதிவு'/'மறுப்பு பதிவு' என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)
பயணிக்கும் பாதை
"இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" (அல்குர்ஆன் 2:208)
Saturday, 5 May 2012
Wednesday, 25 April 2012
10 முஸ்லிம்களின் கவனத்திற்கு ……! (சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு )
இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களைத் தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.
Labels:
அறிவிப்பு,
சமுதாய நலன்கள்,
செய்திகள்,
விழிப்புணர்வு,
வேண்டுகோள்
Tuesday, 17 April 2012
6 ஃபிரான்ஸ் மக்களின் உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்குமா?
மேற்கத்திய நாடுகளிலேயே சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுவது ஃபிரான்ஸ் நாடு. இங்கு 2012 ம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட இந்நிலையில், இந்த மாதம் 9 ந்தேதி ஆரம்பித்த அதிகாரப்பூர்வமான தேர்தல் பிரச்சாரம் 21 ந்தேதி இரவு 12 மணி வரை தொடரும் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறந்துக் கொண்டிருக்கின்றன.
Wednesday, 11 April 2012
19 தொடரும் எச்சரிக்கைகள்!
தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து 'சுனாமி'யாக பெயர் சூட்டப்படுகிறது. பல லட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா? இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?
Labels:
இயற்கைச் சீற்றங்கள்,
சிந்திக்க,
படிப்பினை,
விழிப்புணர்வு
Saturday, 31 March 2012
40 ஏப்ரல் ஃபூல்: முட்டாள் தினம் ஓர் முட்டாள்தனம்!
பொய் சொல்லி ஏமாற்றி, அடுத்தவர்களை முட்டாளாக்கி விட்டோம் என்று பெருமைக் கொள்வதற்கு(?) ஒரு தினம் இந்த ஏப்ரல் 1. அடுத்தவர்களை முட்டாளாக்க நினைத்து அதில் சந்தோஷப்படும் முட்டாள்களிகளின் இந்த தினம் முட்டாள்தனம் நிறைந்தது! சத்தியம் செய்து நம்ப வைத்தாவது "ஏப்ரல் ஃபூல்...!" என்று ஏளனமாகச் சிரிப்பதை ஒரு திறமையாக நினைத்துக் கொள்கிறார்கள் மக்கள். ஏமாறுபவர்களும் கூடவே சிரித்துக் கொண்டாலும் அது அவர்களுக்கு நிச்சயம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைப்பதில்லை.
Labels:
வழிகேடுகள்,
விழிப்புணர்வு













